வீட்டில் அநாதரவாக விடப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்த சிறுமி: அடுத்து நிகழ்ந்த பயங்கரம்
அமெரிக்காவில், வீட்டில் அநாதரவாக விடப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்த சிறுமி ஒருத்தி, தன்னைத்தான் சுட்டுக்கொண்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
CCTVயில் பதிவான காட்சி
அமெரிக்காவின் ப்ளோரிடாவிலுள்ள வீடு ஒன்றில், சோஃபா ஒன்றில் இருந்த துப்பாக்கி ஒன்றைக் கண்ட Serenity (3) என்ற சிறுமி, ஆர்வ மிகுதியால் அதை எடுத்துள்ளாள்.
அதை அவள் ஆராய்ந்துகொண்டிருக்கும்போதே, அந்த துப்பாக்கி திடீரென வெடிக்க, அந்தச் சிறுமிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவள் தன் விரலை இழக்கலாம் என அஞ்சப்படுவதாக சிறுமியின் பாட்டியான Robin Fuller என்பவர் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுமி துப்பாக்கியால் தன்னைத்தான் காயப்படுத்திக்கொள்ளும் காட்சிகள் CCTVயில் பதிவாகியுள்ளன.
அவள் அந்த துப்பாக்கியை எடுக்கும்போது, அந்த துப்பாக்கியை அங்கு வைத்திருந்த அவளது உறவினரான Orlando Young (23) என்பவர், பிள்ளையை கவனிக்காமல், கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.
Credit: WSVN/7News
உறவினர் கைது
துப்பாக்கியை அஜாக்கிரதையாக சோஃபாவில் விட்டிருந்த Orlandoவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குழந்தையை கவனித்துக்கொள்ளத் தவறியதால் உடலுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |