20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் லண்டனில் நிகழ்ந்த பயங்கரம்
பிரித்தானியா, 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் லண்டனில் நிகழ்ந்த பயங்கரத்தை நினைவுகூருகிறது.
மன்னர் சார்லஸ் முதல், அமைச்சர்கள் வரை, பலரும் இந்த நாளில் ஒற்றுமை காக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்...
2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி, வியாழக்கிழமை, காலை 8.49 மணிக்கு, லண்டன் சுரங்க ரயில் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்தது.
சில விநாடிகளுக்குள் மற்றொரு சுரங்க ரயிலிலும், அதைத் தொடர்ந்து மற்றொரு ரயிலிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, லண்டன் டபுள் டக்கர் பேருந்து ஒன்றில் ஒரு குண்டு வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 52 பேர் பலியானார்கள்.

கத்தியுடன் கடலுக்குள் இறங்கும் பிரான்ஸ் பொலிசார்: பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுக்க புதிய நடவடிக்கைகள்
700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அந்த கோர சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஜூலை 7 குண்டு வெடிப்பு சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ள மன்னர் சார்லஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், நம்மைப் பிரிக்க முயலுவோருக்கு எதிராக, நாம் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அவர்.
7/7 தாக்குதல்களை அறிவற்ற தீய செயல்கள் என கடிந்துகொண்டுள்ள மன்னர் சார்லஸ், அந்த தாக்குதல்கள், அனைத்து மத நம்பிக்கைகள் மற்றும் பின்னணி கொண்ட மக்களும், இணைந்து பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் வாழும் ஒரு சமுதாயத்தைக் கட்டுவது எவ்வளவு அவசியம் என்பதை நமக்குக் காட்டுவதாக அமைந்துள்ளன என்று கூறியுள்ளார்.
இஸ்லாமியவாத தீவிரவாதிகள் நிகழ்த்திய 7/7 தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் லண்டனில் இன்று இரங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |