நம்பி வந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்ற.., தன் உயிரை பறிகொடுத்த குதிரை சவாரி தொழிலாளி
காஷ்மீர் தாக்குதலில் தன்னை நம்பி வந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்ற தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற குதிரை சவாரி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
தொழிலாளி மரணம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
பைசரன் பள்ளத்தாக்கில் குதிரை சவாரி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் சையது அடில் உசேன் ஷா. இவர் சுற்றுலா பயணிகளை குதிரைகளில் அழைத்துச் செல்வார்.
இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலை அறிந்த தொழிலாளி தன்னை நம்பி வந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்ற தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றார். அப்போது, தீவிரவாதிகளால் சையது அடில் உசேன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதில், உசேன் ஷாவின் வருமானத்தை நம்பி மட்டுமே அவரது குடும்பம் இருந்து வந்ததால் தற்போது அவர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து உசேன் ஷாவின் தந்தை கூறுகையில், "இந்த தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு மகனுக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. பின்னர் காவல் நிலையத்திற்கு சென்றபோதுதான் அவன் இறந்தது தெரியவந்தது. இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |