காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கணவர் உயிரிழந்த நிலையில், தம்பதியினர் எடுத்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோ வைரல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவர் உயிரிழந்தார். இவருக்கு 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இவரும், இவரது மனைவியும் தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மனைவி கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
Lt Vinay Narwal's last video from Kashmir. Pak will pay for this.. pic.twitter.com/GYE9IX4bgZ
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) April 23, 2025
உயிரிழந்த கணவனின் உடலின் முன்னே மனைவி அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தமபதியினர் இருவரும் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |