இதுதான் எங்கள் முக்கிய இலக்கு! இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
மருத்துவமனை மீது பாய்ந்த பால்டிக் ஏவுகணை
தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இஸ்ரேலிய அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் துணை வெளியுறவு அமைச்சர் மருத்துவமனைக்கு உள்ளே எடுக்கப்பட்ட காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
Iran just hit Soroka Hospital in Be’er Sheva with a ballistic missile.
— Sharren Haskel השכל שרן (@SharrenHaskel) June 19, 2025
Not a military base. A hospital.
This is the main medical center for Israel’s entire Negev region.
Deliberate. Criminal. Civilian target.
The world must speak out. pic.twitter.com/51rNdOp5Kv
இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணையே காரணம் என இஸ்ரேல் குற்றம் சாட்டினாலும், ஈரான் அரசு ஊடகங்கள், மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள IDF கட்டளை மற்றும் உளவுத்துறை தலைமையகமே தங்களது முக்கிய இலக்கு எனத் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |