ஹமாஸ் பணயக்கைதியாக தாய்லாந்து மக்கள்: எகிப்து, கத்தார் உதவியை நாடும் அமைச்சர்
ஹமாஸ் படைகளிடம் பணயக்கைதியாக 22 தாய்லாந்து மக்கள் சிக்கியுள்ளதாக கூறி, கத்தார் மற்றும் எகிப்தின் உதவியை நாடியுள்ளார் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர்.
தாய்லாந்து நாட்டவர்களும்
காஸா பகுதியில் ஹமாஸ் சிறைவைத்துள்ள பணயக்கைதிகளில் தாய்லாந்து நாட்டவர்களும் சிக்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
@reuters
அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நூற்றுக்கணக்கான பணயக்கைதிகளும் ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத இஸ்ரேல், காஸா பகுதி மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், பாலஸ்தீன மக்கள் இதுவரை 8,300 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்,
சிறாகள் பலி எண்ணிக்கை 3000 கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் சந்தேகம் தெரிவித்திருந்த அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு, அவர்களின் அடையாள அட்டையுடன் பாலஸ்தீன நிர்வாகம் பதிலடி அளித்திருந்தது.
30,000 தாய்லாந்து மக்கள்
இந்த நிலையில் ஹமாஸ் படைகள் 230க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதியாக பிடித்து சென்றதாக கூறப்படும் போது, 22 பேர் தாய்லாந்து நாட்டவர்கள் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin தெரிவிக்கையில், ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ள தாய்லாந்து குடிமக்களை மீட்க அவரது அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் கத்தார் மற்றும் எகிப்து தலைவர்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் நேரில் சென்று ஆலோசனை முன்னெடுப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 30,000 தாய்லாந்து மக்கள் இஸ்ரேலில் வேலை செய்கிறார்கள், பலர் விவசாயத் துறையில் உள்ளனர். மட்டுமின்றி, தற்போதைய இஸ்ரேல் - காஸா போரில் சிக்கி 32 தாய்லாந்து நாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 19 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |