விடுதிக்குள் புகுந்து பெண்ணை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற நபர்..மத்திய பிரதேசத்தில் கைது
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்த நபர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
கழுத்தறுத்து கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்கும் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், 24 வயதான கிருத்தி குமார் என்ற பெண்ணை கத்தியால் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்தார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், கிருத்தி குமாரி உடன் அறையில் தங்கியிருந்த இளம்பெண்ணின் காதலர் அபிஷேக் தான் கொலை செய்தது என தெரிய வந்தது.
மத்திய பிரதேசத்தில் கைது
மேலும், அவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில், அபிஷேக் மத்திய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேல்விசாரணைக்காக அவர் பெங்களூருவிற்கு அழைத்து வரப்படுவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |