சோப்ரா முதல் கபூர் குடும்பம் வரை...பாலிவுட் சினிமாவின் பணக்கார குடும்பங்கள் யார்?
இந்திய பாலிவுட் சினிமாவின் புகழ்பெற்ற மற்றும் செல்வந்த குடும்பங்கள் மற்றும் அவர்களின் சொத்துமதிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.
குமார் குடும்பம்
இந்திய பாலிவுட் சினிமாவின் புகழ்பெற்ற மற்றும் செல்வந்த குடும்பங்களில் ஒன்றாக T-Series நிறுவனத்தை நடத்தும் குமார் குடும்பம் கருதப்படுகிறது.
T-Series இன் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான பூஷண் குமார் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணன் குமார் இணைந்து நிறுவனத்தை நடத்துகின்றனர்.
இவர்களின் குடும்ப சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு T-Series இந்தியாவின் மிகப்பெரிய இசை அமைப்பாக வளர்ந்துள்ளது.
சோப்ரா குடும்பம்
குமார் குடும்பத்தை தொடர்ந்து சோப்ரா குடும்பம் பாலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
நடிகை ராணி முகர்ஜியும் குடும்ப உறுப்பினராக உள்ள இந்த குடும்பத்தை ஆதித்ய சோப்ரா தலைமை தாங்குகிறார்.
சோப்ரா குடும்பத்தின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.8000 கோடியாகும்.
பச்சன் குடும்பம்
இவர்களை தொடர்ந்து பச்சன் குடும்பம் பாலிவுட்டின் மிகப்பெரிய குடும்பமாக கருதப்படுகிறது.
புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரை உள்ளடக்கிய பச்சன் குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.4,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கபூர் குடும்பம்
கரீனா கபூர் கான், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட கபூர் குடும்பமும் இந்த செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2,000 கோடியாகும்.
இவர்கள் பொருளாதார ரீதியாக மட்டும் இல்லாமல் சினிமா துறையிலும் மிகப்பெரிய ஆதிகத்தை கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |