108MP பிரதான கேமரா…! மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் POCO M6 Plus 5G
POCO தனது M தொடரை விரிவுபடுத்தும் வகையில் M6 Plus 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 1, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது.
விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், கசிவுகள் மற்றும் வதந்திகளை அடிப்படையாக வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்.
விரைவான செயல்திறன்
Snapdragon 4 Gen 2 சிப்செட்டால் இயக்கப்படும் M6 Plus 5G மென்மையான மல்டி டாஸ்கிங் மற்றும் திறமையான கேமிங்கை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அற்புதமான கேமரா
108MP பிரதான கேமரா அதன் சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது குறைந்த வெளிச்சத்திலும் உயர் தரமான புகைப்படங்கள் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெரிய திரை
6.79-இன்ச் அளவுள்ள பெரிய திரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது சிறந்த துல்லியமான திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய பற்றரி
5030mAh கொண்ட கணிசமான பற்றரி ஒரு நாள் முழுவதும் சாதனத்தை இயக்க வைக்க போதுமானது.
5G இணைப்பு
பெயரிலிருந்தே இந்த ஸ்மார்ட்போன் வேகமான இணைய சேவைக்கான 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் என்று தெரிகிறது.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை
POCO M6 Plus 5G நடுத்தர விலை பிரிவு ஸ்மார்ட்போன் வரிசையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துல்லியமான விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அது ₹15,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |