100 அடி உயரத்திலிருந்து விழுந்த ஹாட் ஏர் பலூன்: விபத்தில் 5 பேர் மரணம்
நியூ மெக்ஸிகோவில் சூடான காற்று பலூன் விபத்துக்கு உள்ளாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க மாகாணம் நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புகெர்க் நகரத்தில் (Albuquerque) ஒரு சூடான காற்று பலூன் மின் கம்பிகளில் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சனிக்கிழமையன்று காலை 7 மணிக்கு பல வண்ண பலூன் ஒன்று சுமார் 100 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்ததை பார்த்ததாக சில சாட்சிகள் விவரித்தனர்.
பலூனிலிருந்து பயணிகளின் கூடை பிரிந்து, பின்னர் ஒரு தெருவில் மின் இணைப்புகளில் விழுந்து தீப்பிடித்து இருந்ததாக அல்புகெர்க் காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 13,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இறந்தவர்கள் குறித்து எந்த அடையாளங்களும் வெளியிடப்படவில்லை, ஆனால் விமானி உட்பட மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இறந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
The balloon fell in the Southwynd housing area. On my neighbors house. pic.twitter.com/sBj5LO1g9n
— Austin Council (@AustinCouncil1) June 26, 2021
அல்புகெர்க் என்பது சூடான காற்று பலூன்களுக்கு புகழ் பெற்ற தலமாகும். அக்டோபர் மாதத்தில் இங்கு 9 நாள் திருவிழா நடத்தப்படும். இது உலகம் முழுவதிலுமிருந்து நூறாயிரக்கணக்கான பார்வையாளர்களையும் விமானிகளையும் ஈர்க்கிறது. இது உலகளவில் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.