தினமும் வெந்நீர் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா?
நாம் அனைவரும் காலை எழுந்தவுடன் டீ, காபி அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
ஆனால், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வந்தாலோ அல்லது தினமும் 3 வேளைக்கு மேல் வெந்நீர் குடித்து வந்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் -
1. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள பழைய என்ஸைம்கள் வெளியேறி, புது அமிலங்கள் உற்பத்தியாகும்.
2. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால், மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும். மேலும், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேறி குடல் தூய்மையடையும்.
3. வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால், வயிற்று சம்பந்தப்பட்ட பல நோய்கள் குணமடையும். வயிற்று வலி, வயிற்று உப்புசம் முதலியவை சரியாகும். மேலும், உணவுகள் நன்று செரிமானம் அடைந்து வெளியேறும்.
4. காலையில் வெந்நீர் குடித்து வந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும். மேலும், ரத்த அழுத்தம், மனஅழுத்தம், கீழ்வாதம் கட்டுப்படும்.
5. தினமும் வெந்நீர் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக் கிருமிகள் வெளியேறி உடல் எடை குறையும்.
6. தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வந்தால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் சரியாகும். மேலும், சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை நன்கு வேலை செய்யும்.
7. வெந்நீர் குடித்து வந்தால், வாயுத்தொல்லை ஏற்படாது. அஜீரணத்தொல்லை நீங்கும், ஒற்றைத்தலை வலி ஏற்படாது.
8. வெந்நீர் குடித்து வந்தால் உங்கள் சருமம் பட்டுப்போல் மின்னும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |