செல்லப்பிராணி வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
இலங்கையில் நிலவி வரும் மிக மோசமான காலநிலையின் காரணமாக செல்லப்பிராணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் அபாயம்
வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு அதிக வெப்பம் ஏற்றக்கொள்ளாத போது வெப்ப பக்கவாதம் ஏற்படும் விலங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டுவது நல்லது என கால்நடை மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பகலில் அதிகமாக வெப்பம் நிலவும் போதும் 20 நிமிடங்களுக்கு அதிகமாக வாகனங்களில் செல்லப்பிராணிகளை வைத்திருப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீடுகளிலும் சாலைகளில் இருக்கும் விலங்குகளுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் என்பதால் தேவையான தண்ணீர் மற்றும் உணவை கட்டாயம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் பாம்பு வரும் நிலையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.