கொரோனாவின் தாக்கத்தால் சுவிஸ் உணவகங்களில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை
சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் தாக்கத்தால் உணவகங்களில் பணியாற்றிய 40,000 பேர் வேலையிழந்ததாக சமீபத்தைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை, 2020இல் கொரோனாவின் தாக்கத்தால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே, 2021ஆம் ஆண்டின் விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. 2020க்குப் பிறகு, உணவகங்களில் பணியாற்றிய சுமார் 10,000 பேர் வேலையிழந்துள்ளனர்.
அப்படிப் பார்த்தால், இந்த கொரோனாவின் தாக்கம், சுமார் 50,000 பேரை வீட்டுக்கு அனுப்பியிருக்கும் என கருதப்படுகிறது. பெரும்பாலும் உணவகங்கள் பணி நிமித்தம் பயணிப்பவர்களையே பெரிதும் நம்பியிருப்பதால், பயணம் தடைபட்டதால் அவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், மலைப்பகுதிகள் மற்றும் சில கிராமப்புறங்களில் உள்ள உணவகங்கள்,
கொரோனா காலகட்டத்தில் மக்கள் சுற்றுலா செல்ல வெளிநாடுகளுக்குச் செல்லாமல்,
உள்ளூர் சுற்றுலாத்தலங்களை தேர்ந்தெடுத்ததால், அல்லது வெளிநாடுகளுக்கு
சுற்றுலா செல்ல இயலாததால் உள்ளூர் சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலா சென்றதால்,
ஓரளவு சமாளித்துக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.