திடீரென அடித்த அதிர்ஷ்டம்! ஒரே இரவில் லட்சாதிபதியான ஹோட்டல் சர்வர்.. எப்படி தெரியுமா?
அமெரிக்கா ஹோட்டல் ஒன்றில் சர்வராக பணிபுரிந்து வந்த பெண் ஒரே பேஸ்புக் பதிவால் தற்போது கோடிஸ்வரியாக மாறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Atlanta நகரில் இயங்கி வரும் IHOP in Morrow என்ற பிரபல உணவகத்திற்கு Rita என்கின்ற பெண் ஒருவர் தனது தாயாருடன் உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு Jazmine Castillo என்பவர் உணவுகளை பரிமாறியுள்ளார்.
அவரின் பணிவு, அணுகுமுறை போன்றவை Ritaவை மிகவும் கவர்ந்தது. இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், நான் IHOP சென்றபோது சர்வர் Jazmine எங்களை நன்றாக கவனித்து கொண்டார்.
நாங்கள் சாப்பிட்ட உணவுக்கு 30 டொலரை செலுத்தி விட்டு சப்ளையர் Jazmineக்கு சுமார் 20 டொலர் டிப்ஸ் கொடுத்தோம். அவருக்கு சர்வர் பணி பிடிக்கவில்லை என்றும் அவர் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்புகிறார்.
ஆனால் அவரின் குடும்ப சூழ்நிலைக்காக மட்டுமே மனதிற்கு பிடிக்காத வேலையை செய்து வருகிறார். இதனால் உங்களால் முடிந்த உதவியை அவருக்கு செய்யுங்கள் என்று Jazmine ‘Cash App’ விவரங்களையும் Rita குறிப்பிட்டிருந்தார்.
Jazmine Cash App செயலிக்கு பலரும் தங்களால் முடிந்த தொகையை அனுப்ப தொடங்கினர். இதையடுத்து ஒரே வாரத்தில் அவரின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை சேர்ந்தது. இதையடுத்து Jazmine தனக்கு உதவியவர்களுக்கும், இந்த பெரிய தொகை கிடைக்க காரணமாக இருந்த Ritaவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.