தாயாரின் காதலனால்... நான்கு இளம் சகோதரர்களுக்கு ஏற்பட்ட துயரம்: நடுக்கும் சம்பவம்

Death Argentina
By Arbin Jan 12, 2023 11:22 AM GMT
Report

அர்ஜென்டினாவில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு இளம் சகோதரர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவே விபத்துக்கு காரணம்

குறித்த சிறார்களின் தாயாரின் காதலர் 5 டன் அளவுக்கு துண்டு கற்களை வீட்டின் கூரை மீது பாதுகாத்து வந்ததாகவும், இதுவே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

தாயாரின் காதலனால்... நான்கு இளம் சகோதரர்களுக்கு ஏற்பட்ட துயரம்: நடுக்கும் சம்பவம் | House Collapsed Young Brothers Crushed Death

@newsflash

ஜனவரி 9ம் திகதி நடந்த இந்த விபத்தில் 4 வயதான இரட்டையர்கள், இவர்களின் சகோதரர்கள் 6 வயது மற்றும் 10 வயது ஆகியோர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 51 வயதான Catalino Daniel Lopez என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு அது எனவும், அவர் அந்த குடியிருப்பின் தட்டையான கூரை மீது பொருட்களை பாதுகாக்கவும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடுமையான அழுத்தம் தாங்காமல், கூரை இடிந்து விழுந்துள்ளது என்றே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, அந்த குடும்பமானது இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் லோபஸ் வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளது.

தாயாரின் காதலனால்... நான்கு இளம் சகோதரர்களுக்கு ஏற்பட்ட துயரம்: நடுக்கும் சம்பவம் | House Collapsed Young Brothers Crushed Death

@jampress

தற்போது இந்த விவகாரத்தில் லோபஸ் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது, இருப்பினும், பதில் கூறாமல் இருப்பது அவரது உரிமை என்பதால் அவர் அதையே பின்பற்றி வருவதாக தெரியவந்துள்ளது.

உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை

இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட அந்த தாயார், எனது பிள்ளைகள் நால்வரும் இறந்துள்ளனர், நானும் இறப்பதாகவே உனர்கிறேன், இன்னும் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனது செல்வங்கள் என்னை தவிக்கவிட்டு சென்றுள்ளனர், இது வெறும் கனவாக இருக்காதா என ஆசைப்படுகிறேன் எனவும் அவர் கண்கலங்கியுள்ளார். அவரது வேறு இரு பிள்ளைகள் சம்பவத்தின் போது குடியிருப்பினுள் இல்லை என்றே கூறப்படுகிறது.

தாயாரின் காதலனால்... நான்கு இளம் சகோதரர்களுக்கு ஏற்பட்ட துயரம்: நடுக்கும் சம்பவம் | House Collapsed Young Brothers Crushed Death

@jampress

அதில் ஒருவரே அவசர உதவி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார். மேலும், கூரையில் இருந்து தூசு கிளம்புவதை அறிந்து தாயாரிடம் என்ன நடக்கிறது என விசாரிக்க சென்றதால் அவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது இரட்டையர்கள் தூக்கத்தில் இருந்துள்ளனர். எஞ்சிய இருவரும் படுக்கையில் விளையாடியபடி இருந்துள்ளனர். விபத்தினை அடுத்து மூவர் சம்பவயிடத்திலேயே மரணமடைய, நான்காவது சிறுவன் மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் இறந்துள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US