சுவிட்சர்லாந்தில் வீடுகள் தட்டுப்பாடு: இந்த விடயம் மூலம் தீர்வு கிடைக்கலாம்
சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது பலரும் அறிந்த விடயம்தான்.
இந்நிலையில், வீடுகள் தட்டுப்பாட்டைத் தீர்க்க திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் மூலம் தீர்வு கிடைக்கலாம்
அதாவது, சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவும் அதே நேரத்தில், பல அலுவலகங்கள் வெறுமையாக உள்ளன.
சுமார் 43,000 மக்கள் வாழ்வதற்கு போதுமான அளவிலான இடம் அலுவலக கட்டிடங்களில் வெறுமையாக உள்ளது.
சூரிச்சில் அமைந்துள்ள, சுவிட்சர்லாந்தின் வர்த்தக ரீதியான ரியல் எஸ்டேட் மற்றும் முதலீடுகள் அமைப்பான CBRE அலுவலகம், இரண்டு மில்லியன் சதுர மீற்றர் அளவிலான அலுவலகங்கள் வெறுமையாகக் கிடப்பதாக தெரிவிக்கிறது.
ஆக, இந்த அலுவலகங்களை வீடுகளை மாறினால் சுவிட்சர்லாந்தில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கலாம் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
என்றாலும், அதில் ஒரு சிக்கலும் உள்ளது. அது என்னவென்றால், கட்டிட உரிமையாளர்களுக்கு வீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட, அலுவலகக் கட்டிடத்திலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகம் ஆகும்.
ஆக, அலுவலகக் கட்டிடங்கள் அனைத்தையுமே வீடுகளாக மாற்றிவிட இயலாத சூழ்நிலை, இந்த திட்டத்துக்கு தடையாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |