சொத்தில் 95%ஐ நன்கொடையாக வழங்கிய பணக்கார தம்பதி: எதற்காக தெரியுமா?
ஹூஸ்டனின்(Houston) பிரபலமான தம்பதி தங்கள் சொத்தில் 95%-ஐ நன்கொடையாக வழங்க திட்டமிட்டு இருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யார் இந்த நான்சி மற்றும் ரிச் கிண்டர் தம்பதி?
அமெரிக்காவின் மிகப்பெரிய எரிசக்தி உள்கட்டமைப்பு நிறுவனமான கிண்டர் மார்கனின்(Kinder Morgan) நிறுவன மற்றும் செயல் தலைவர் தான் இந்த ரிச் கிண்டர்(Rich Kinder), இவரது மனைவி நான்சி கிண்டர்(Nancy Kinder).
இவர்கள் 1997ம் ஆண்டு நிறுவிய கிண்டர் அறக்கட்டளை மூலம் அவர்களின் தொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் ரைஸ் பல்கலைக்கழகம், ஹூஸ்டன் நுண்கலை அருங்காட்சியகம் மற்றும் டெக்சாஸ் அருங்காட்சியகம் ஆகியவற்றை நீண்ட காலமாக ஆதரித்து வருகின்றனர். குறிப்பாக ஹூஸ்டன் பகுதியின் கல்வி, மருத்துவம் உட்பட பல மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தம்பதியின் நிகர சொத்துமதிப்பு சுமார் $11.3 பில்லியன் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
சொத்தில் 95% நன்கொடை
இந்நிலையில் ஹூஸ்டன் வளர்ச்சிக்காக நான்சி மற்றும் ரிச் கிண்டர் தம்பதி தங்களது சொத்தில் 95%-ஐ நன்கொடையாக வழங்க திட்டமிட்டு உள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பானது, ஹூஸ்டனின் Third Ward பகுதியில் அமைந்துள்ள Emancipation Park-கின் விரிவாக்க நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டுள்ளது.
தம்பதியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நகருக்கான நல் வாழ்வை மேம்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |