ரயில் நிலையத்தில் தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை: சிசிடிவி காட்சிகள் ஆய்வு
நியூயார்க் நகரில் பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைவிடப்பட்ட குழந்தை
திங்கட்கிழமை காலை நியூயார்க் நகரின் பென் ஸ்டேஷனில் பச்சிளம் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அடையாளம் தெரியாத நபர் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவை குழுவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளுக்கு அடியில் கிடந்த குழந்தை மீட்கப்படும் போது உணர்வுகளுடனும், விழிப்புடனும் இருந்ததாக நியூயார்க் நகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெல்லவியூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
அதே சமயம், குழந்தையை கைவிட்டு விட்டு சென்ற நபரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் ரயில் நிலையத்தின் கண்காணிப்பு காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |