செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள்
செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது ஹூவுதிகள் தாக்குதல் நடத்தியத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன், ஊழியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
ஹூவுதி தாக்குதல்
செங்கடலில் எடர்னிட்டி சி (Eternity C) என்ற சரக்குக் கப்பலை ஹூவுதி கிளர்ச்சியாளர்கள் மூழ்கடித்ததில், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பல பணியாளர்கள் கடத்தப்பட்டனர்.
Περισυνελέγη σώος ο Έλληνας φρουρός του Eternity C - Βρισκόταν 48 ώρες στη θάλασσα#ingr #innews #eternityc pic.twitter.com/04v45p78uX
— in.gr/news (@in_gr) July 10, 2025
திங்கட்கிழமை பிற்பகலில் இந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, ஆளில்லா விமானங்கள் (drones) மற்றும் அதிவேகப் படகுகளில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்-ப்ரொப்பல்லட் கிரெனேடுகள் (rocket-propelled grenades) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடலில் தத்தளித்த ஊழியர்கள்
இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஐரோப்பிய ஒன்றிய கடற்படை, கடலில் ஒரு நாளுக்கும் மேலாகத் தத்தளித்த ஆறு பேரை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மேலும் 15 பணியாளர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
எடர்னிட்டி சி கப்பலில் மொத்தம் 22 பணியாளர்கள் இருந்தனர், இவர்களில் பெரும்பாலானோர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் மூன்று பேர் கொண்ட பாதுகாப்பு குழுவும் இருந்துள்ளது.
கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
கப்பல் மீதான தொடர் தாக்குதல் இரண்டு நாட்களாக நீடித்த நிலையில் இறுதியாக, புதன்கிழமை அன்று கப்பல் முற்றிலுமாக மூழ்கியது.
இந்தச் சம்பவத்தை யேமனில் உள்ள அமெரிக்க தூதரகம், X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் கடுமையாகக் கண்டித்துள்ளது.
கடத்தப்பட்டவர்களை "உடனடியாகவும் நிபந்தனையின்றியும் பாதுகாப்பாக விடுவிக்க" வேண்டும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |