சவுதி விமான நிலையங்களில் ஹவுதி தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்
Houthi Attacks Kill 3 at Saudi Airports: சவுதி விமான நிலையங்களில் ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் ரியாத் கிங் கலித் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் ஹவுதி படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று வெளிநாட்டு குடிமக்கள் உயிரிழந்தனர்.
மேலும் 36 பேர் காயமடைந்ததாக சவுதி பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்ஹா விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் மொராக்கோ மற்றும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
ரியாத் நகரில் உள்ள கிங் கலித் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் சவுதி குடிமக்கள்.
சவுதி அதிகாரிகள், பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து சேதத்தை மதிப்பீடு செய்து, பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, செப்டம்பர் 18 அன்று, ஏமனிலிருந்து ரியாத் விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட ஹவுதி ஏவுகணையை சவுதி கூட்டணி படைகள் தடுத்து அழித்ததாகவும், அடுத்த நாள் எரிபொருள் சேமிப்பு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சவுதி அரேபியாவுக்கு இராணுவப்படைகளை அனுப்பும் துருக்கி, பாகிஸ்தான் - செயல்படுத்தப்பட்ட மெக்கா பாதுகாப்பு கூட்டணி
ஏமனில், சவுதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ஹவுதி படைகள், பாப் அல்-மந்தேப் நீரிணை அருகிலுள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளதால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
அமெரிக்க தூதரகம், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல்கள், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்து உலகளவில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |