சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களை தாக்கிய ஹவுதிகள்: பதிலடிகள் தொடரும் என எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவுதியின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்த ஹவுதி
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் யான்பு நகரில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹவுதி படையினர் இராணுவ பேச்சாளர் யஹ்ஹா சரீ தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏமன் தலைநகர் சனா மீது சவுதி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக யஹ்ஹா சரீ குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்துவதாக சவுதி குற்றஞ்சாட்டிய நிலையில், அதனை மறுத்த யஹ்ஹா சரீ, குறிவைக்கப்பட்ட ராணுவ இலக்குகளை ஏவுகணைகள் வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் சவுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர போவதாகவும் சரீ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஹவுதி படையினர் நடத்திய தாக்குதல் பதற்றம் காரணமாக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.