சவுதி ராணுவ தளம் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்: பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம்
Houthi Claim Missile Strikes on Saudi: சவுதி ராணுவ தளம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி ராணுவ தளம் மீது தாக்குதல்
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை வெளியிட்ட தகவலில், சவுதி அரேபியாவின் ஷரூரா(Sharurah) ராணுவ தளத்தில் அமைந்துள்ள கட்டளை மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஏமனில் சவுதி அரேபியாவில் நடத்தப்பட்டு வரும் தொடர் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சவுதியின் விரோத போக்கு தொடர்ந்தால் தாங்களும் தொடர்ந்து எதிர்ப்பை காட்டுவோம் என்று யஹ்யா சரீ எச்சரித்துள்ளார்.
அத்துடன் சவுதியின் எல்லைக்குள் இன்னும் ஆழமான மற்றும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் சவுதி அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |