ஏமன் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்: பிரதமர் கொல்லப்பட்டதாக ஹவுதி அறிவிப்பு!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தங்கள் பிரதமர் அகமது காலெப் நாசர் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் மேலும் பல மூத்த ஹவுதி தலைவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு முதல் ஹவுதிகள் ஏமனின் வடமேற்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த மோதல் அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்திற்கும் ஏமன் நாட்டில் உள்நாட்டு போரை தூண்டியுள்ளது.
உறுதிப்படுத்திய இஸ்ரேல்
இந்நிலையில் சனா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை இஸ்ரேல் உறுதிப்படுத்தி இருப்பதுடன் ஹவுதி ராணுவ இலக்குகளை குறி வைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |