சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு

Donald Trump Saudi Arabia Yemen
By Arbin Jul 26, 2026 03:29 AM GMT
Report

செங்கடல் கடற்கரையோர சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது ஹவுதிகள் உக்கிரத் தாக்குதலை நடத்திய நிலையில், இரண்டு வாரங்களில் முதல்முறையாக ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா திடீரென்று நிறுத்தியுள்ளது.

தாக்குதலை நிறுத்தியது

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடங்கிய போரானது தற்போது தீவிரமாக விரிவடைந்து வருவதாகவே தெரிய வருகிறது. ஈரான் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பலமுறை தாக்குதல் நடத்தியுள்ள ஹவுதிகள், தற்போது சவுதி அரேபியா மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்துள்ளனர்.

சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு | Houthis Attack Saudi Us Holds Back

இது மத்திய கிழக்கை மேலும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளதுடன், எண்ணெய் விலைகள் மீண்டும் கடும் உயர்வை எட்ட காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தங்கள் கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்வதாக சனிக்கிழமையன்று தெரிவித்த அமெரிக்க இராணுவம், கடந்த 13 இரவுகளாகத் தீவிரத் தாக்குதலை முன்னெடுத்து வந்ததை நிறுத்தியதுடன், விளக்கமளிக்கவும் மறுத்துள்ளது.

இந்த இடைநிறுத்தம் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தூதரக ரீதியிலான அணுகுமுறையையே தாம் விரும்புவதாக ட்ரம்ப் எப்போதும் தெளிவாகக் கூறி வந்துள்ளார்; அதேவேளையில், பேச்சுவார்த்தைக்கு ஆக்கபூர்வமாக முன்வரத் தவறினால் என்ன நடக்கும் என்பதையும் அவர் ஈரானுக்கு உணர்த்தியுள்ளார் என்றார்.

இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்திய நிலையில், ஈரான் தரப்பில் இருந்து சனிக்கிழமை பதில் தாக்குதல் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு

தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு

மட்டுமின்றி, ஈரான் மீது ஒரு உக்கிரமானத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ட்ரம்ப் கூறி வந்த நிலையில், தற்போது அந்த திட்டத்தை அவர் கைவிட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஈரான் மீது அப்படியான ஒரு நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுக்கும் என்றால், அது இந்த மோதலை இன்னும் விரிவடையச் செய்யும் என்பதுடன், ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே ஆயுதப் பற்றாக்குறையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அமெரிக்கா மேலும் சிக்கலை எதிர்கொள்ளும் என்பதும் ட்ரம்ப் நிர்வாகத்தை பின்வாங்க வைத்துள்ளது.

சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு | Houthis Attack Saudi Us Holds Back

மேலும், ஈரான் மீதான கடும் நடவடிக்கைகளால் பாரசீக வளைகுடா நட்பு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து அந்நியப்படவும் வாய்ப்பு, மட்டுமின்றி எரிசக்தி விநியோகம் மற்றும் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களை பின்வாங்க வைத்துள்ளது என்றும் நியூயார்க் டைம்ஸ் சனிக்கிழமை இரவு செய்தி வெளியிட்டது.

ஹவுதிகளும் முழுமையாக

வளைகுடாப் பகுதியில் அமைதி நிலவியபோதிலும், ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே சனிக்கிழமையன்று நடந்த சண்டையானது, ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள ஈரானுக்கு எதிரானப் போர், இரண்டாவது முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையையும் பாதிக்கக்கூடும் என்பதையும், யேமனின் உள்நாட்டுப் போரை மீண்டும் தூண்டிவிடக்கூடும் என்பதையும் அமெரிக்காவுக்கு சுட்டிக்காட்டியது.

சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு | Houthis Attack Saudi Us Holds Back

ஈரான் ஆதரவு ஹவுதிகள் யேமனின் தலைநகரான சனாவைக் கைப்பற்றியதிலிருந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹவுதிகளுக்கு எதிராகப் போரிடும் அரபு கூட்டணிக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கி வருகிறது.

சண்டையாலும் பஞ்சத்தாலும் மில்லியன் கணக்கான மக்கள் மரணமடைந்த யேமனின் உள்நாட்டுப் போர், 2022 முதல் போர் நிறுத்தம் மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆளானதிலிருந்து ஈரான் நடத்தி வரும் விரிவானப் போரில் ஹவுதிகளும் முழுமையாக இணைந்ததைத் தொடர்ந்து, அந்தப் போர்நிறுத்தம் இந்த மாதம் முறிந்துபோனது.

சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு | Houthis Attack Saudi Us Holds Back

கடந்த வாரத்தில் சவுதி அரேபியா மீது ஹவுதிகள் ஒரு கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளனர்; சவுதியின் அனைத்து எண்ணெய் நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும் என்று ஹவுதி தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வியாழக்கிழமையன்று, செங்கடலில் சவுதிக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே இஸ்ரேலுக்கு எதிராக செங்கடலில் ஹவுதிகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US