தீவிரமாக விரிவடையும் ஈரான் போர்... சவுதி எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
ஈரானுக்கு எதிராக மீண்டும் தொடர்ச்சியாக 12 இரவுகள் அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
விடாப்பிடியாக இருப்போம்
நாசா வெளியிட்டுள்ள தரவுகளில் சவுதி கொடியுடன் கூடிய என்செலியா என்ற எண்ணெய் கப்பல் செங்கடலில் தீப்பிடித்து எரிவது பதிவாகியுள்ளது.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கப்பல்களின் ஊழியர்களும் காயமின்றி தப்பியுள்ளதாகவே தெரிய வருகிறது.
இந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு எதிரான தங்களது கடற்படை நடவடிக்கைகளைத் தொடர்வோம் என்றும், முற்றுகைக்கு முற்றுகை என்ற சமன்பாட்டை அமுல்படுத்துவதில் விடாப்பிடியாக இருப்போம் என்றும் ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ கூறியுள்ளார்.
ஆனால், வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை இந்தத் தாக்குதல்கள் மீறுகின்றன என சவுதி அரேபியாவின் அரசாங்க செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தீவிரமாக விரிவடைந்து
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் முற்றுகைக்கு எதிராகவே தற்போது செங்கடலில் கடற்படை முற்றுகையை ஹவுதிகள் முன்னெடுத்துள்ளனர். மட்டுமின்றி, சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக ஈரான் போர் தீவிரமாக விரிவடைந்து வருவதாகவே கூறப்படுகிறது.

ஏற்கனவே இஸ்ரேலின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகம் இரகசியமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளிவந்து விவாதத்திற்கு காரணமானது.
மட்டுமின்றி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதும், அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |