ஹவுதிகள் கேட்டுக்கொண்டார்கள்... மோதலில் அமெரிக்கா தலையிடாது: ட்ரம்ப் வெளிப்படை
Houthis had called Trump admnistration: ஹவுதிகள் ட்ரம்ப் நிர்வாகத்தை தொடர்புகொண்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழியை முடக்கிய வான்வழித் தாக்குதலுக்கு ஈரானே காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் காரணமா
ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று இந்தக் கிழக்கு-மேற்கு குழாய்வழி.

முக்கியமான எண்ணெய் குழாய் வழித்தடத்தின் மீதான தாக்குதலுக்கு ஈரான் காரணமா என்று டப்ளினில் செய்தியாளர்கள் கேள்விக்கு, அவர்கள் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்; அநேகமாக அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில், தாம் ஒரு நல்ல நண்பராகக் கருதும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேசியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
மட்டுமின்றி, ஏமனில் ஈரானுடன் இணக்கமான போக்கைக் கொண்ட ஹவுதிகள் தமது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, இந்த மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, ஹவுதிகளுக்கு எதிராக ட்ரம்பிடம் உதவிக் கோரிய சவுதி பட்டத்து இளவரசருக்கு அவர் கைவிரித்தது சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.
அவர்களுக்கு அதிருப்தி
தற்போது ஹவுதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே ட்ரம்ப் அந்த முடிவுக்கு வந்துள்ளது உறுதியாகியுள்ளது. மட்டுமின்றி, நாங்கள் இதில் ஈடுபடாமல் இருப்பதே ஹவுதிகளுக்கு மிகவும் விருப்பமாக உள்ளது;
அதனால்தான் அவர்கள் பெரும்பாலான கப்பல்களைச் செல்ல அனுமதிக்கிறார்கள். ஒரே ஒரு நாட்டின் மீதுதான் அவர்களுக்கு அதிருப்தி உள்ளது; அதை நாங்கள் சரிசெய்துவிடுவோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.