இஸ்ரேல் தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருக்கிறோம்: களத்தில் குதிக்கும் ஏமனின் ஹவுதிகள்
சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதும் லெபனான் மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு
மூன்று வாரம் போர் நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இந்த வாரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலுக்கு கொல்லப்பட்ட லெபனான் மக்களின் எண்ணிக்கை 700 கடந்துள்ளது. ஆனால், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயார் என இஸ்ரேல் தற்போது அறிவித்திருந்தாலும், லெபனானின் ஹிஸ்புல்லா படைகள் மீதான தாக்குதல் தொடரும் என்றே இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இன்னொரு கட்டத்தை நோக்கி
மட்டுமின்றி, இஸ்ரேல் பிரதமரின் முரணான பேச்சுக்கள் போர் நிறுத்த முன்னெடுப்புகளுக்கு சிக்கலாக மாறும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மீது தீவிரமான தாக்குதலை முன்னெடுப்பது தொடர்பில் மிக விரைவில் முடிவெடுத்து அறிக்கை வெளியிடப்படும் என ஏமனின் ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.
ஒருபக்கம் பாலஸ்தீன ஹமாஸ் படைகள், இன்னொரு பக்கம் லெபனானின் ஹிஸ்புல்லா படைகள் தற்போது ஏமனின் ஹவுதிகளும் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்க இருப்பது மத்திய கிழக்கில் தற்போதுள்ள பிரச்சனைகள் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |