கடைசி நொடியில் ட்ரம்ப் எடுத்த முடிவு... தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஹவுதிகள்
Trump calls off airstrikes at last minute: கடைசி நிமிடத்தில் ட்ரம்ப் வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்தார்.
ஹவுதிகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை டொனால்ட் ட்ரம்ப் கடைசி நேரத்தில் ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஏமனில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் கைப்பற்ற ஹவுதிகள் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிக்கடி மாற்றிக்கொண்டதாக
குறித்தப்பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம், சவுதி ஆதரவுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து செங்கடல் கடற்கரைப் பகுதியைத் துண்டிக்க முடியும்.

ஏமனில் சமீபத்திய வாரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ள தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹவுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவுதி அரேபியா விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி சமீபத்திய நாட்களில் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டதாக 'நியூயார்க் டைம்ஸ்' திங்களன்று செய்தி வெளியிட்டது.
ஹவுதிப் படைகள் தரைவழியாகத் துரிதமாக முன்னேறி, சவுதி ஆதரவுடைய யேமன் அரசுப் படைகளிடமிருந்து யேமனின் செங்கடல் கடற்கரைப் பகுதியின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளன;
அத்துடன், ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் தடைகளைத் தவிர்த்து எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்றுப் பாதையாகச் சவுதி அரேபியா பயன்படுத்தி வரும் மிக முக்கியமான 'பாப் அல்-மண்டப்' (Bab al-Mandab) நீரிணைக்கு அருகிலுள்ள பகுதிகளையும் ஹவுதிகள் கைப்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பல வாரங்களாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஹவுதிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க உதவுமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ட்ரம்ப்பிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நெதன்யாகுவின் அழுத்தத்தால் ஈரான் விவகாரத்தில் தலையிட்டு, கடும் பின்னடைவையும் சந்தித்து, தற்போது வெளியேற முடியாமல் தத்தளிக்கும் டொனால்ட் ட்ரம்ப், யேமனில் சவுதி நடத்தும் போரில் இணைவதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், சவுதி பட்டத்து இளவரசருடனான அந்த தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு ஹவுதிகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்குத் தயாராகுமாறு பென்டகனிடம் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஹவுதிகள் விவகாரத்தில் ட்ரம்ப் நாளுக்கொரு நிலைப்பாட்டை எடுத்து, சவுதி அரேபியாவை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார்.
சவுதி அரேபியா எதிர்கொள்ளும்
இந்த மாத தொடக்கத்தில் அயர்லாந்திற்கு விஜயம் செய்த போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஹவுதிகள் தங்களைத் தொடர்புகொண்டதாகவும், அவர்கள் அமெரிக்காவுடன் சண்டையிட விரும்பவில்லை என்பதை விளக்கியதாகவும் கூறினார்.
மட்டுமின்றி, அவர்கள் தற்போது பாப் அல்-மண்டப் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும், அமெரிக்கா அங்கே தலையிடும் சூழல் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும், ஹவுதிகள் விவகாரம் ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதாகும், அதை சவுதி அரேபியா எதிர்கொள்ளும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்த மாதம் ஹவுதிகள் மேற்கொண்ட மின்னல் வேக முன்னேற்றம், பரந்த அளவிலான மத்திய கிழக்கு மோதலை ஒரு புதிய களத்திற்கு விரிவுபடுத்தியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கும் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஏமனில் ஹவுதிகளுக்கு எதிரான போரில் இணையுமாறு இளவரசர் முகமது விடுத்த தொடர்ச்சியான வேண்டுகோள்களை ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை நிராகரித்து வந்துள்ளது.

இதனிடையே, முக்கியத்துவம் வாய்ந்த கஹ்பூப் மலைப்பகுதிகளில் உள்ள ஹவுதி நிலைகள் மீது சவுதி அரேபியா சமீபத்திய நாட்களில் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது; இருப்பினும், இது ஹவுதிப் போராளிகளின் முன்னேற்றத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஹவுதிகள் மீது அமெரிக்கா இரண்டு மாதங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது; ஆனால், அந்த அமைப்பினருடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு ட்ரம்ப் அத்தாக்குதல்களை நிறுத்தினார், அதன்பின்னர் ஹவுதிகள் மோதலில் இருந்து விலகியே இருந்து வருகிறார்.
மட்டுமின்றி, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மிக மோசமானத் தோல்வியைச் சந்தித்துள்ள சூழலிலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையிலும், ஏமன் விவகாரத்தில் பெரிய அளவில் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, ஹார்முஸ் நீரிணை வழியாகக் குறைந்தபட்சம் ஓரளவிற்காவது எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வதிலேயே ட்ரம்ப் நிர்வாகம் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகிறது.