செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள்
காஸா மீதான போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், ஏமனில் ஹவுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதுடன், பதிலுக்கு ஹவுதிகளும் திருப்பி தாக்கி வருகின்றனர்.
அன்சார் அல்லா
ஈரான் ஆதரவு ஹவுதிகளிடம் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட சில நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளன.
பாலஸ்தீனம்-2 போன்ற அவர்களின் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவால் விடும், ஆனால் அவற்றின் குறைந்த எண்ணிக்கை, காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார பலவீனம் ஆகியவை இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாமல் செய்கின்றன.
அன்சார் அல்லா என்று உத்தியோகப்பூர்வமாக அழைக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவாகும், இது வடக்கு மற்றும் மேற்கு ஏமனின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
2023 ல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆனால் வலுவான, அமெரிக்க ஆதரவு இஸ்ரேலை எதிர்கொள்ளும் ஆயுதங்கள் ஹவுதிகளிடம் உள்ளனவா என்றக் கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் ஆதரவு காரணமாகவே ஹவுதிகள் ஆயுதங்கள் திரட்டுகின்றனர். மட்டுமின்றி, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் ஆதரவு திரட்டும் நிலையில் உள்ளனர்.
ஹவுதிகளிடம் 1800 கி.மீ தொலை சென்று தாக்கும் Toufan என்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. 2000 கி.மீ வரையில் பயணிக்கக் கூடிய சுல்ஃபிகார் ஸ்கட் ஏவுகணை, இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தவே வடிவமைக்கப்பட்ட Quds-2 ஏவுகணை,
மேம்பட்ட ஆயுதங்கள்
இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளது. ஆனால் தங்களிடம் இருக்கும் Palestine-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை என ஹவுதிகள் கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன், Scud-B, Scud-C, Hwasong, Tochka, Qaher-1 and Zelzal-3 ஆகிய ஏவுகணைகளும் ஹவுதிகள் வசம் உள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் ஈரானின் சௌமர் குடும்பக் குரூஸ் ஏவுகணைகள் உள்ளன, அவை சுமார் 2000 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் வரை தாக்கும் திறன் கொண்டவை. ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் C-802 கப்பல் எதிர்ப்பு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட P-800 ஓனிக்ஸ் ஏவுகணைகளும் இருக்கலாம்.
ஹவுதிகளிடம் Samad-3 மற்றும் Samad-4, Wa’id உட்பட ட்ரோன்களும் உள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் சில மேம்பட்ட ஆயுதங்கள் இருந்தாலும், அவர்களின் இராணுவத் திறன் பல வழிகளில் குறைவாகவே உள்ளது.
அவர்களிடம் 20 முதல் 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களின் ஆயுதங்கள் பழையவை அல்லது பராமரிப்பு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மேம்பட்ட ஆயுதங்களைக் கையாள பயிற்சி பெற்ற வீரர்ர்கள் பற்றாக்குறையும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |