2023ஆம் ஆண்டு புடினுக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் எப்படி இருக்கும்: ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞரின் கணிப்பு
2023 எப்படி இருக்கும் என்பதில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஆர்வம் காட்டி வரும் நிலையில், இப்போதைய சூழலில் மிகவும் பிரபலமான ஒருவருக்கொருவர் எதிரான ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு 2023 எப்படி இருக்கும் என்பதைக் குறித்து கணித்துள்ளார் ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞர் ஒருவர்.
2023 புடினுக்கு எப்படி இருக்கும்?
ரஷ்ய ஜோதிடக்கலைஞரான Marina Vasilieva என்பவர் 2023ஆம் ஆண்டு புடின் தனது தலைவிதியை சந்திக்கும் ஆண்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, ஏப்ரல், ஜூன் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்கள் புடினுக்கு உகந்தவையாக இருக்காது என்கிறார் அவர்.
இந்த மாதங்களின்போது முக்கியமான முடிவுகள் எடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம் என்கிறார் Marina.
2023 உக்ரைன் ஜனாதிபதிக்கு எப்படி இருக்கும்?
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியைப் பொருத்தவரை, அவருக்கு 2023 சாதகமான ஆண்டாக இருக்கும் என்கிறார் Marina.
உதவிக்கு மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் வருவார்கள் என்று கூறும் Marina, மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் ஒரு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கிறார்.