ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

Germany Student Visa Job Opportunity
By Ragavan Feb 07, 2025 08:07 PM GMT
Report

ஜேர்மனியில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதிக்கும் நீண்ட கால விசா German National visa என்றும் D visa என்றும் அல்லது Long Stay Visa/long-term visa எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த நீண்ட கால விசாவிற்கான விதிமுறைகளில் ஜேர்மன் அரசாங்கம் 2025 முதல் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இந்த மாற்றங்கள் திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வசதியாக மாற்றப்பட்டுள்ளது.

Germany, German National Visa, Germany Long Term Visa, Germany Long Stay Visa, Germany D visa

புதுப்பிக்கப்பட்ட நீண்டகால விசா பிரிவுகள் 

இந்த ஆண்டு (2025) முதல், பின்வரும் பிரிவுகளில் நீண்டகால விசா வழங்கப்படுகிறது.

  • Employment & skilled work visa - வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கும், Skilled Immigration Act மூலம் தகுதி பெற்றவர்களுக்கும் நீண்டகால விசா வழங்கப்படும்.
  • Study & research - ஜேர்மன் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு அல்லது ஆய்வாளர்களாக சேர்ந்த மாணவர்களுக்கு நீண்டகால விசா வழங்கப்படும்.
  • Job seekers (Chancenkarte) - புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Opportunity card மூலம் ஒரு வருடத்திற்குள் வேலை தேட அனுமதி அளிக்கும் வகையில் நீண்டகால விசா வழங்கப்படும்.
  • Family reunification - ஜேர்மன் குடிமக்களின் குடும்பத்தினர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நீண்டகால விசா வழங்கப்படும்.
  • Business & freelancing - தொழில் தொடங்கவோ முதலீடு செய்யவோ விரும்புவோருக்கு நீண்டகால விசா வழங்கப்படும்.
  • Training & internships - தொழில்பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ளுபவர்களுக்கு நீண்டகால விசா வழங்கப்படும்.  

உலகின் மிக மதிப்புமிக்க டாப் 10 நாணயங்கள்

உலகின் மிக மதிப்புமிக்க டாப் 10 நாணயங்கள்

நீண்டகால விசா விதிமுறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:

  • Opportunity Card - Opportunity Card திட்டத்தின் கீழ் வேலை தேடுவதற்கான புதிய புள்ளிவிவர அடிப்படையில் விசா வழங்கப்பட்டு, ஒரு வருடம் வரை அனுமதி மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
  • EU blue card-ல் மாற்றம் - சம்பளத் தொகை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் ICT, மருத்துவம், பொறியியல் போன்ற பல்வேறு துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஓன்லைன் விண்ணப்பம் (Digitalization) - விண்ணப்பதாரர்கள் German Consular Services Portal மூலம் ஓன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
  • தகுதிகள் அங்கீகார வசதி - தனிநபர்கள் இப்போது தங்கள் வெளிநாட்டு தகுதிகளை அங்கீகரிக்கும் செயல்முறையை முடிக்கும்போது ஜேர்மனியில் இருந்து செயல்பட அனுமதி. 

Germany, German National Visa, Germany Long Term Visa, Germany Long Stay Visa, Germany D visa

வேலை வாய்ப்புகள் மற்றும் விசா தேவைகள்

  • வேலைவாய்ப்பு விசா (Employment visa) - நேரடி வேலை செய்யலாம்.
  • EU blue card - உயர் தகுதியான தொழிலாளர்கள் கட்டுப்பாடின்றி வேலை செய்யலாம்.
  • Opportunity Card - வேலை தேடுவோருக்கு பகுதி நேர வேலை அனுமதி.
  • மாணவர் விசா (Student visa) - வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம்.
  • Freelancer visa - self-employed தொழிலாளர்களுக்கு அனுமதி.
  • Job seeker visa - வேலை கிடைக்கும் வரை வேலை செய்ய அனுமதி இல்லை.

உலகின் சிறந்த புத்திசாலி நாடுகள்., ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம்

உலகின் சிறந்த புத்திசாலி நாடுகள்., ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம்

 

நீண்டகால விசாவிற்கு விண்ணப்பிக்கும் முறை

1 - விசா வகையை தெரிவு செய்யவும் : உங்கள் நோக்கத்திற்கேற்ப விசா வகையை தெரிவு செய்யுங்கள்.

2 - ஆவணங்களை தயாரிக்கவும்: பாஸ்போர்ட், பணி அனுமதி, கல்வி சான்றிதழ்கள் போன்றவை தேவை.

3 - நேர்காணல் சந்திப்பைத் திட்டமிடுங்கள்: அருகிலுள்ள ஜேர்மன் தூதரகத்தில் விசா சந்திப்பை பதிவு செய்யுங்கள்.

4 - நேர்காணலில் கலந்துகொள்ளுங்கள் - தேவையான தகவல்களை வழங்கி நேர்காணல் மேற்கொள்ளுங்கள்.

5 - விசா செயலாக்கம் - 6 முதல் 12 வாரங்களுக்கு இடையில் முடிக்கப்படும்.  

Germany, German National Visa, Germany Long Term Visa, Germany Long Stay Visa, Germany D visa

விசா கட்டணம்

Standard Long Stay Visa - 75 யூரோ (Euro)

EU Blue Card - 110 யூரோ

Job Seeker Visa - 75 யூரோ 

இனி போர் டாங்கிகளை தயாரிக்கவுள்ள ஜேர்மனியின் புகழ்பெற்ற ரயில் தொழிற்சாலை

இனி போர் டாங்கிகளை தயாரிக்கவுள்ள ஜேர்மனியின் புகழ்பெற்ற ரயில் தொழிற்சாலை

விண்ணப்பதாரர்கள் ஜேர்மனியில் தங்கியிருக்கும் காலத்தில் தங்களை ஆதரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த நிதி ஆதாரத்தையும் காட்ட வேண்டும்.

அந்தவகையில், வேலை தேடுபவர்கள் (job seekers) மாதம் 1,200 யூரோ (ஆண்டுக்கு 14,400 யூரோ) நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும்.

அதேபோல், மாணவர்கள் ஆண்டுக்கு 11,208 யூரோ நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும்.

தங்கத்தில் பூட்டு., ஜேர்மனியில் கண்டெடுக்கப்பட்ட ஆச்சரியமான பொருள்

தங்கத்தில் பூட்டு., ஜேர்மனியில் கண்டெடுக்கப்பட்ட ஆச்சரியமான பொருள்

ஜேர்மனி திறமையான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்தில் 2025-ல் புதிய நீண்ட கால விசா மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Germany, German National Visa, Germany Long Term Visa, Germany Long Stay Visa, Germany D visa

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US