அணு ஆயுதம் தயாரிக்க உதவிய அமெரிக்கா - நட்பு நாடாக இருந்த ஈரான் எதிரியாக மாறியது எப்படி?
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க உதவும் அளவிற்கு நட்பு நாடாக இருந்த அமெரிக்கா, தற்போது அதனை அழிக்க துடிப்பது ஏன் என்பதை பார்க்கலாம்.
நட்பு நாடான ஈரான் எதிரியாக மாறியது எப்படி?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கூறி கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி மத்திய கிழக்கு முழுவதும் போரை விரிவுபடுத்தியது.
இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு உலக நாடுகள் போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளன.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும், போர் நிறுத்தத்தை ஏற்க ஈரான் மறுத்துள்ளது.
ஈரான் மீதான இந்த போர் அமெரிக்காவால் கடந்த மாதம் தொடங்கபட்டது அல்ல. 1980களின் காலகட்டத்தில் இருந்தே ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் பொருளாதார தடை, ஆயுத ஏற்றுமதிக்கு தடை என முடிந்தளவு ஈரானை பலவீனப்படுத்தி வந்தது.
ஈரான் மற்றும் ஈராக் இடையேயான போரில் ஈராக்கிற்கு முழு ஆயுத உதவிகளையும் வழங்கிய அமெரிக்கா ஈரானின் ராணுவ நிலைகள் குறித்த தகவல்களையும் வழங்கியது. இதில் அமெரிக்கா வழங்கிய ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1960 களின் காலத்தில் இஸ்ரேலை விட அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த ஈரான் மீது அமெரிக்காவிற்கு தீராத வெறுப்பு ஏற்பட்டது ஏன், ஈரானை அணு ஆயுத நாடாக உருவாக்க அதற்கான மூலப்பொருட்களை வழங்கிய அமெரிக்கா அதன் பின்னர் அதன் அணு சக்தி கட்டமைப்பை அழிக்க துடிப்பது ஏன் என்பது குறித்து உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |