சுங்கச் சோதனையையும் தாண்டி போதைப்பொருளைக் கடத்திய கும்பல்: சிக்கியது எப்படி?
சுவிட்சர்லாந்தில், விமான நிலைய அதிகாரிகளின் சோதனையையும் தாண்டி போதைப்பொருள் ஒன்றை வெற்றிகரமாக கடத்திக்கொண்டு நாட்டுக்குள் நுழைந்துவிட்டது ஒரு போதைக் கடத்தல் கும்பல்.
சிக்கியது எப்படி?
சுவிட்சர்லாந்தின் சூரிக் விமான நிலையம் வழியாக 44 கிலோ எடையுள்ள போதைப்பொருள் ஒன்றைக் கடத்திச் சென்றுள்ளது போதை கும்பல் ஒன்று.
அந்த போதைப்பொருளின் மதிப்பு 1.5 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்.

விடயம் என்னவென்றால், எப்படியோ விமான நிலைய அதிகாரிகளின் சோதனையையும் தாண்டி அந்த கும்பல் அந்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு சென்றுவிட்டது.
அந்த கும்பலைச் சேந்தவர்கள் அனைவரும் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருக்க, பொலிசார் ஹொட்டல் அறையின் கதவைத் தட்டி அவர்களை கைது செய்துள்ளார்கள்.
நடந்தது என்னவென்றால், அவர்கள் விமான நிலையத்திலிருந்து செல்லும்போது, அவர்களுடைய உடைமகளிலிருந்து ஒரு பை கீழே விழுந்துள்ளது. அதை அவர்கள் கவனிக்கவில்லை.
அந்தப் பை அதிகாரிகள் கையில் சிக்க, அவர்கள் அதை திறந்து பார்க்க, அதற்குள் 10 கிலோ போதைப்பொருள் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த கும்பல் தங்கியிருந்த ஹொட்டலுக்கு விரைந்த பொலிசார் அவர்களை கைது செய்துள்ளார்கள்.
அவர்களுக்கு, 4 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |