கண்ணியமிக்க மானிடனை உருவாக்கும் வெசாக் - இலங்கையில் கொண்டாடுவது எப்படி?
புத்த மதத்தில், குறிப்பாக தேரவாத பௌத்தத்தில், புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவற்றை நினைவுகூரும் நாளாக வெசாக் தினம் காணப்படுகிறது.
வெசாக் பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பௌத்த பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாகவும் இது காணப்படுகிறது.
பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நாள் பொது விடுமுறை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது கிழக்கு ஆசிய நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இது புத்தரின் பிறப்பை மட்டுமே நினைவுபடுத்துகிறது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வெசாக் பண்டிகையின் வரலாறு
பௌத்தர்கள் உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த ஒரு கடவுளை நம்புவதில்லை.
உண்மையில், பெரும்பாலான பௌத்தர்கள் சித்தார்த்த கௌதமர் என்ற மனிதனின் போதனைகளை நம்பி தான் வாழ்ந்து வருகிறார்கள்.
கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த ஒரு இளவரசராக சித்தார்த்தர் வளர்ந்து வந்தார். செல்வமும் ஆடம்பரமும் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை சித்தார்த்த கௌதமர் உணர்ந்து, அவை அனைத்தையும் இழந்து துறவறத்தை மேற்கொண்டார்.
அவரது ஆறு வருட படிப்பின் பின்னர் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டறியும் இலக்கை அடைந்தார். அதாவது ஞானத்தை அடைந்தார் என கூறப்படுகிறது. இவ்வேளையில் தான் அவர் புத்தரானார்.
GETTY IMAGES
இந்த வெசாக் பண்டிகையானது இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், லாவோஸ், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற தேரவாத பௌத்தம் நடைமுறையில் உள்ள நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெசாக் எப்போது?
வருடத்திற்கு ஒருமுறை வெசாக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இது மே 23 வியாழக்கிழமை வந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் வெசாக் திகதியானது மாறுப்பட்டு வரும். ஏனெனில் இது பழங்கால சந்திர மாதமான வெசாகாவின் முதல் முழு நிலவு நேரத்தில் நடைபெறுகிறது, இது வழக்கமாக மே அல்லது ஜூன் தொடக்கத்தில் காட்சியளிக்கும்.
வெசாக் எப்படி கொண்டாடப்படுகிறது?
பல பௌத்தர்கள் தங்கள் உள்ளூர் பௌத்த விகாரைக்கு செல்வார்கள். சிலர் பௌர்ணமியின் பகல் மற்றும் இரவு முழுவதும் அங்கே தங்கி வழிப்பாட்டில் ஈடுபடுவார்கள்.
பலர் நல்ல செயல்களைச் செய்வார்கள், மந்திரம் மற்றும் தியானத்தில் பங்கேற்பார்கள், பௌத்த போதனைகளைப் பற்றி சிந்திப்பார்கள், விகாரைக்கு பிரசாதம் கொண்டு வருவார்கள், மக்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வார்கள்.
பலர் தங்களது வீட்டில் வெசாக் கூடுகளை செய்து தொங்க விடுவார்கள். இந்த நிகழ்வானது இலங்கையில் மத பேதமின்றி நடைபெறும். பொதுவாகவே அனைவரது வீட்டிலும் வெசாக் கூடு தொங்கவிடப்பட்டு இருக்கும்.
அனைத்து சாலைகளிலும் பலருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும் நிகழ்வு காலையில் இருந்து இரவு நேரம் வரை நிகழ்ந்துக் கொண்டிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |