மனைவியின் இறுதிச்சடங்கில் குழந்தையுடன் சோகமே உருவாக நின்ற கணவன்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

investigation uk
By Balamanuvelan Jun 19, 2021 07:48 AM GMT
Report

பிரித்தானிய பெண் ஒருவர் கிரீஸ் தீவில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை அவரது கணவரே கொன்றுவிட்டு நாடகமாடிய விடயம் வெளியாகியுள்ளது. கிரீஸ் தீவு வாசிகள் கால்பந்து போட்டியை உற்சாகத்துடன் ரசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென பிரேக்கிங் செய்தி ஒன்று வெளியாகிறது.

தெருக்களில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள், அந்த செய்தியைக் காண்பதற்காக கடைகளில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகள் முன் கூடுகிறார்கள்.

தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சியைக் கண்டு திகைத்துப்போன மக்கள், தாங்கள் காணும் காட்சி கனவா அல்லது நனவா என குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதில், தலை கவிழ்ந்த நிலையில், முகத்தில் கருப்பு நிற மாஸ்கும், குண்டு துளைக்காத உடையும் அணிந்து, கைகள் பின்னால் விலங்கிடப்பட்டு, ஆயுதம் தாங்கிய பொலிசார் புடைசூழ அழைத்துவரப்படுகிறார் கிரேக்க பைலட்டான பாபிஸ் என்னும் Charalambos Anagnostopoulos (33).

மனைவியின் இறுதிச்சடங்கில் குழந்தையுடன் சோகமே உருவாக நின்ற கணவன்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை | How Greek Monster Plotted British Wifes Murder

இதற்கு முன் மக்கள் அவரை பார்த்த விதமே வேறு... மனைவியை யாரோ கொள்ளையர்கள் கொலை செய்துவிட்டதாகக் கூறி, தன் மகள் தாயில்லாமல் எப்படி வளருவாள் என அவர் கண்ணீர் விட்டதையும்.

பிரித்தானிய குடிமகளான மனைவி கரோலினின் (20)இறுதிச்சடங்கின்போது கையில் குழந்தையுடன் மனைவியின் சவப்பெட்டி மீது மலர் ஒன்றை வைக்கும் காட்சியையும், மாமியாரை அணைத்து ஆறுதல் கூறும் காட்சியையும் தொலைக்காட்சியில் கண்டிருந்த மக்கள், இப்போது அவரே மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு கைது செய்யப்பட்டு அழைத்து வரும் காட்சியைக் கண்டு குழம்பித்தான் போனார்கள்.

இன்னொரு பக்கம், சமூக ஊடகங்களிலும் வெளி உலகுக்கும் ஆதர்சன தம்பதிகள் போல் காட்சியளித்த பாபிஸுக்கும் கரோலினுக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சினை இருந்தது என்கிறார்கள் அவர்களது நண்பர்கள்.

மனைவியின் இறுதிச்சடங்கில் குழந்தையுடன் சோகமே உருவாக நின்ற கணவன்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை | How Greek Monster Plotted British Wifes Murder

பொறாமையும், கட்டுப்படுத்தும் குணம் கொண்ட பாபிஸுடனான வாழ்க்கை கரோலினுக்கு இன்பம் அற்றதாக இருந்துள்ளது. 2019இல் தனது டைரியில் இருவருக்கும் நடந்த சண்டை குறித்து குறிப்பிட்டிருக்கிறார் கரோலின். மற்றொரு நாள், இனி என்னால் பாபிஸுடன் வாழ முடியுமா என்று தெரியவில்லை, என் அக்கா வீட்டுக்கு போய்விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார் கரோலின்.

அதைத்தான் தான் கொலை செய்ததற்கான காரணமாக பாபிஸும் கூறியிருக்கிறார். எங்கே கரோலின் தன்னை விட்டு போய்விடுவாளோ, தனது குழந்தையை தன்னிடமிருந்து பிரித்துவிடுவாளோ என அஞ்சியே தான் கரோலினுடன் சண்டையிட்டதாகவும், தாக்கும்போது அவர் உயிரிழந்துவிட்டதாகவும்தான் தெரிவித்துள்ளார் பாபிஸ். ஆனால், அதுவும் உண்மையாக இருக்குமா என்ற சந்தேகமே எழுகிறது.

பாபிஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகால், ஆயுள் தண்டனை அவருக்கு மட்டுமா? தங்கள் அன்பு மகளை இழந்து தவிக்கும் கரோலினின் பெற்றோருக்கும், அறியா வயதிலேயே தாயையும், ஏன் தந்தையையுமே இழந்து தவிக்கும் கரோலிலின் 11 மாத குழந்தை லிடியாவுக்கும் அல்லவா!

மனைவியின் இறுதிச்சடங்கில் குழந்தையுடன் சோகமே உருவாக நின்ற கணவன்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை | How Greek Monster Plotted British Wifes Murder

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US