4 மாதங்களில் 20 கிலோ எடை குறைத்தது எப்படி? இந்தியர் சொன்ன ஆச்சரியப்பட வைக்கும் தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் 4 மாதங்களில் எப்படி 20 கிலோ எடையை குறைத்தேன் என்பது குறித்து கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்ற 34 வயது மதிக்கத்தக்க அனில்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அப்போது இவர் 116 கிலோ எடை இருந்தார்.
இது குறித்து அவர் அங்கிருக்கும் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் என் உடல் எடையைப் பற்றி கவலை பட்டதே கிடையாது.
உடல் எடை அதிகரித்தால், என்ன விளைவுகள் எல்லாம் ஏற்படும் என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல், கண்ட உணவுகளை சாப்பிடுவேன். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் குப்பை உணவுகளை சாப்பிடுவேன்.
இதன் காரணமாக என் உடல் எடை அதிகரிக்க துவங்கியது. என் உடைகள் எல்லாம் இருகத் துவங்கியது. பலரும் என் உடல் எடையைப் பற்றி கருத்து கூறியுள்ளனர். ஆனால், இதை நான் கொரோனா காலக்கட்டத்தில் தான் உணர்ந்தேன்.
ஏனெனில் கொரோனா வைரஸால் உடல் பருமனானவர்கள் பாதிக்கப்பட்டால், அது அவர்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்.
அது தான் என் உடல் எடையை குறைக்க வைக்க தூண்டியது. நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை முறையை மாற்ற முடிவு செய்தேன்.
காலையில் முறையான உடற்பயிற்சி. சரியான உணவு முறை, குறிப்பாக ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து கட்டுப்பாட்டோடு கடைபிடித்து சாப்பிட்டு வந்தால், நிச்சயமாக எடை இழப்பு என்பது சாத்தியம் ஆகும்.
வெள்ளை அரிசி, ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பழங்களை குறைத்துக் கொண்ட இவர் தண்ணீர் அதிகம் குடிக்க துவங்கியுள்ளார். பயணத்தின் போது, நாள் ஒன்றிற்கு சுமார் 8 முதல் 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பது, உணவை நன்றாக மென்று சாப்பிடுவது, வழக்கமான உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது நிச்சயம் உடல் எடை குறைப்பிற்கு உதவும் என்று கூறியுள்ளார்.
மேலும், இவர் உடல் எடையை குறைக்க பல ஆண்டுகள் இவர் முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதில் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. அதன் பின்பு தான்,, உடல் எடையை குறைக்க நாம் நான்கு முக்கிய இரகசியங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்தது. அது தான் அர்ப்பணிப்பு, விருப்பம், பொறுமை மற்றும் ஆரோக்கியமான உணவு, என்று கூறினார்.
நாம் செய்யும் உடற்பயிற்சி கடினமாகவும், வேதனையாகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் தேவைக்கேற்ப வடிவமைத்து கொள்ள வேண்டும், அதை நாம் சுமையாக உணரக் கூடாது. என்னுடைய தினசரி உடற்பயிற்சியில் ஒன்றரை மணி நேரம் யோகாவிற்கு ஒதுக்கப்படும்.
அது காலை 5 முதல் 6 மணி வரைக்குள் தான் இருக்கும். நீங்கள் எடையை குறைக்க நினைத்தால், நிச்சயம் உங்களுக்கு ஒரு கூட்டாளி, அவர் நண்பரோ, மனைவியோ யாரேனும் இருந்தால், உதவியாக இருக்கும்.
எனக்கு என் மனைவி உடன் இருந்தார். மூன்று மாதங்களில் 19 கிலோவை இழந்தேன். மனைவிக்கும் நன்றி கூறிய அவர், நான்கு மாதங்களில் 20 கிலோவை குறைத்தேன்.
அதன் பின் உடல் எடை குறைப்பு என்பது அவ்வளவு கடினம் இல்லை என்பதை உணர்ந்தேன். உலகில் எதுவுமே எளிதான வேலை கிடையாது.
நாம் அதை உறுதியாக செய்யும் போது, நாம் அதை அடையும் போது எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்று கூறியுள்ளார்.