மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார்? சலித்துக்கொள்ளும் ராணி கமீலா
மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த ராணி கமீலா, அவரைக் குறித்து ஒரு விடயத்தில் சலித்துக்கொண்டுள்ளார்.
மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார்?
புற்றுநோய் பாதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என சமீபத்தில் ராணி கமீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, சிகிச்சை எடுத்துக்கொள்வதால் அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Image: Getty Images
மன்னருடைய உடல் நிலை சீரடைந்து வருகிறது என்று கூறிய கமீலா, வேடிக்கையாக, அவர் ஒழுங்காக இருந்தால், இன்னும் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
அதாவது, மன்னர் சிகிச்சையிலிருக்கும்போதே கடுமையாக உழைக்கிறாராம், ஓய்வெடுத்துக்கொள்ளாமல் அவர் கடினமாக உழைக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதற்காகவே, அப்படிக் கூறியுள்ளார் கமீலா.
Image: POOL/AFP via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |