பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ரகசியமாக உதவிய இஸ்ரேல்
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ரகசியமாக இஸ்ரேல் உதவியது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோடியின் இஸ்ரேல் பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உள்ள உறவுகள் குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய நாடாளுமன்ற கௌரவமான 'க்னெசெட் சபாநாயகர் பதக்கம்' வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே செயற்கை தொழில்நுட்பம், வணிகம், பாதுகாப்பு, விவசாயம், அணுசக்தி, கனிமவள உள்ளிட்ட துறைகளில் 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இது அவரது 2வது இஸ்ரேல் பயணம் ஆகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் முதல்முறையாக இஸ்ரேல் சென்றார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
இந்தியாவிற்கு ரகசியமாக உதவிய இஸ்ரேல்
இஸ்ரேல் உடனான உறவு இந்தியாவின் உறவு மோடியின் ஆட்சிக்காலத்தில் மட்டுமில்லை. 1971ஆம் ஆண்டிலே இந்தியா பாகிஸ்தான் போரின் போது, இஸ்ரேல் இந்தியாவிற்கு உதவியுள்ளது.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில், இஸ்ரேல் ரகசியமாக இந்தியாவிற்கு 105 மிமீ மோட்டார்கள், வெடிமருந்துகள் போன்ற முக்கியமான இராணுவ உபகரணங்களை வழங்கியது.

அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மெய்ர், ஈரானுக்கு வழங்குவதாக இருந்த ஆயுதங்களை ஒரு இஸ்ரேலிய ஆயுத உற்பத்தியாளர் மூலம் உதவியை வழங்கியதாகவும், தொடர்ந்து உதவி செய்வதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுடனான போரின் போது இந்திய பிரதமர் இந்திரா காந்தி, சர்வதேச உதவி கேட்டு 61 நாடுகளுக்கு கடிதம் எழுதியாகவும் அதில், சோவியத் யூனியன், இஸ்ரேல், யூகோஸ்லாவியா ஆகிய 3 நாடுகள் மட்டுமே ஆதரவான பதில் வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், 1980களின் முற்பகுதியில் பாகிஸ்தானின் கஹுதா யுரேனியம் செறிவூட்டல் ஆலையை இந்தியா அழிப்பதற்கு இஸ்ரேல் உதவ முன்வந்தது.
இந்த கஹுதா செறிவூட்டல் ஆலையை, பின்னர் பாகிஸ்தானின் வெற்றிகரமான அணு ஆயுத முயற்சிகளுக்கு மையமாக மாறி, அணு ஆயுத நாடாக உதவியது.
இஸ்ரேல் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேலின் இந்த உதவிகளே 1992 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகாரபூர்வ ராஜதந்திர உறவு உருவாக காரணமாக அமைந்தது.
இந்த தகவல்கள், இந்திரா காந்தியின் முதன்மை செயலாளர் பி.என்.ஹக்சர் பராமரிக்கப்படும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க பத்திரிகையாளர் கேரி பாஸ் தனது " தி பிளட் டெலிகிராம்" என்ற புத்தகத்தை எழுதினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |