சூரியனின் ஆயுட்காலம் இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது தெரியுமா?
நமது பூமி உட்பட முழு சூரிய குடும்பத்தின் மையமாக உள்ள சூரியன் எப்போதும் பிரகாசிக்காது என்பதுதான் உண்மை.
பெரிய சூடான வாயு பந்தான சூரியன் தொடர்ந்து ஆற்றலை உற்பத்தி செய்து வருகிறது.
சூரியனும் ஒரு நட்சத்திரம் போன்று தான். ஒவ்வொரு நட்சத்திரத்தைப் போலவே அதற்கும் ஒரு வயது இருக்கிறது.
சூரியன் தோராயமாக 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான கோள் எனக் கூறப்படுகிறது. சூரியன் தன் வாழ்நாளில் பாதியை கழித்துவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சூரியனின் உள்ளே ஹைட்ரஜன் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. இந்த ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குகின்றன.
இந்த செயல்முறை அதிக ஆற்றலை வெளியிடுகிறது. அதனால் தான் சூரியன் பிரகாசிக்கிறது.
சூரியனின் உட்புறத்தில் உள்ள அனைத்து ஹைட்ரஜனும் குறைந்துவிட்டால், அது சிவப்பு நிறமாக வளரும். இந்த நிலை red giant என்று அழைக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து அது படிப்படியாக சிறிய நட்சத்திரமாக சுருங்கிவிடும் என கூறப்படுகிறது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சூரியன் ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானது.
ஹைட்ரஜன் தீர்ந்த பிறகு, 2 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் நட்சத்திர மரணத்தின் நிலைகளை சூரியன் கடந்து செல்லும் என சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |