ஒருவர் எத்தனை வங்கி கணக்கு வைத்திருக்கலாம்? என்னென்ன விதிகள்
ஒருவர் வங்கிகளில் எத்தனை கணக்கு வைத்திருக்கலாம் என்பதையும், என்னென்ன விதிகள் என்பதையும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
அனைவரிடமும் வங்கி கணக்கு
தற்போதைய காலகட்டத்தில் வங்கி கணக்குகள் இல்லாத நபரே நாம் பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிமும் வங்கி கணக்கு உள்ளது. அதில் தான் நாம் அனைவரும் பணப்புழக்கத்தை வைத்திருக்கிறோம்.
முக்கியமாக, தனியார் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் சம்பள கணக்கு அல்லாமல், சேமிப்பு கணக்கையும் வைத்திருப்பார்கள். அப்படி ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருந்தால் அதற்கு என்ன விதிகள் என்பதை பார்க்கலாம்.
அதிகமான வங்கி கணக்கு
ஒருவர் 3 அல்லது 4 வங்கி கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதற்கு அதிகமாகவும் வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம். ஏனென்றால், ரிசர்வ் வங்கி அதற்கான எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. அதனால், எத்தனை வங்கி கணக்கு வேண்டுமானாலும் நீங்கள் திறந்து கொள்ளலாம்.
அதே போல, வங்கி கணக்குகளை நிர்வகிப்பதும் எளிதான ஒன்று தான். நீங்கள் வங்கிகளில் சரியான பரிவர்த்தனைகளை தொடர்ந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. அதே நீங்கள் நீண்ட காலமாக வங்கி கணக்குகளை பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் கணக்கு மூடப்படலாம்.
வங்கிகள் கூறுவது என்ன?
நீங்கள், உங்களது சம்பள கணக்கை தவிர சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்பையாவது வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் உங்களது வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை கழிக்கப்படும்.
அப்படி, வங்கிகளில் இருந்து கட்டணம் கழிக்கப்பட்ட பிறகும் சரியாக பராமரிக்கவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு எதிர்மறையாகிவிடும். அந்த நேரத்தில் உங்களது வங்கி இருப்புத்தொகையில் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வங்கியும் நமக்கு செய்திகள் அனுப்புவதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிப்பது மட்டுமல்லாமல், வங்கி கணக்கை பராமரிப்பதற்கும் நாம் செலவழிக்க வேண்டும்.
அதே போல, டெபிட் கார்டுக்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்துவது மூலம் சேமிப்பை பத்திரமாக வைத்திருக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |