உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட்
ஸ்மார்ட்போன் மூலம் மொசாட் உளவு பார்க்கும் சாத்தியம் குறித்து IBC Tamil ன் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.
போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட்
இன்று உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிதாக உள்ளது. ஸ்மார்ட் போனில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், போன் ஹேக் செய்யப்படுவதற்கான அபாயங்களும் உள்ளது.

ஐபோன் அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்கள் உடைய போனாக கருதப்பட்டாலும் அதனையும் ஹேக் செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
போனை ஹேக் செய்து கேமரா மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை எங்கோ ஒரு இடத்திலிருந்து கண்காணிக்க முடியும். நீங்கள் ரகசியமாக பேசுவதை ஒட்டுக்கேட்க முடியும்.
சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் உச்சத்தலைவர் காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொல்ல இஸ்ரேலின் மொசாட் அமைப்பு அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் அவரது பாதுகாப்பு அலுவலர்களின் போனை ஹேக் செய்ததன் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்தே அந்த தாக்குதலை மேற்கொண்டது.
இதே போல், ஹிஸ்புல்லா அமைப்பில் உள்ளவர்கள் யாரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டாம், ஸ்மார்ட் போன் இருந்தால் அதனை மண்ணில் புதைத்து விடுங்கள் என அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கட்டளை பிறப்பித்தார். அது உங்களை உளவு பார்க்கும் ஒற்றன் என தெரிவித்திருந்தார்.
மேலும், இதனை தெரிவித்த 7 மாதங்களில் ஹிஸ்புல்லாகளிடம் இருந்த பேஜர் வெடித்து சிதறியது.
இதே போல், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மெமரி சிப்களை ஆப்பிள் போன்களில் பயன்படுத்த கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்த பல்வேறு தகவல்களை வழங்கியுள்ள IBC Tamil ன் நிராஜ் டேவிட் தான் இஸ்ரேல் சென்ற போது, அங்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் கூறிய கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |