2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா?
பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
சமீப காலமாக, தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில், பலரும் நகை வாங்க முடியாத சிரமத்தில் இருக்கின்றனர்.
அந்தவகையில், 2030ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்று பார்க்கலாம்.

அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30,000 வரை உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பணவீக்கம், தங்கத்தின் தேவை மற்றும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலை போன்றவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தை வாங்கி சேமித்து வருவதால் சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.

மேலும், தங்கச் சுரங்கங்களில் உற்பத்திச் செலவு உயர்வு, புதிய தங்க வளங்கள் குறைவாகக் கண்டுபிடிக்கப்படுவது போன்றவை விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
உலக நாடுகளுக்கிடையேயான போர்ச் சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் நிலை போன்ற காரணத்தினால் பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.
இந்நிலையில், 2030ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தற்போதைய அளவை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |