தினமும் கோடியில் சம்பாதிக்கும் புர்ஜ் கலீஃபா - 3 நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?
உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என கருதப்படும் புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வதற்கு அறவிடப்படும் பணத்தொகையின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புர்ஜ் கலீஃபா
இந்த கட்டிடம், ஈஃபிள் கோபுரத்தை விட மூன்று மடங்கு உயரம் உடையதாகும். இது 2716.5 அடி உயரத்தை கொண்டு துபாயில் காணப்படுகிறது.
புர்ஜ் கலிஃபாவின் கொங்கிரீட் 100,000 எடை கொண்ட யானைக்கு சமமாகும் என கூறப்படுகிறது.
குறித்த கட்டிடத்தில் மொத்தமாக 140 மாடிகள் உள்ளன. ஒவ்வொரு மாடிக்கு செல்வதற்கும் நீண்ட பயண தூரத்தை கொண்ட லிஃப்ட் காணப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை பார்க்க உலகம் முழுவதில் இருந்தும் மக்கள் வருகை தந்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த கட்டடத்தில் நிறைய வர்த்தக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள் இருக்கின்றன.
ஓர் தனிப்பட்ட நிறுவனத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேரப்பதற்காக புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது.
இதில் காட்சிப் படுத்துவதற்கு அறவிடப்படும் பணத் தொகை குறித்து பார்க்கலாம்.
விளம்பரம் செய்ய எவ்வளவு செலவாகும்?
இந்த கட்டடத்தில் விளம்பரம் செய்ய பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’செம்மொழியான தமிழ் மொழியே’ பாடலை விளம்பரம் செய்தார்.
சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதிபதி நடித்த மகாராஜா படத்தின் காட்சிகளும் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ஒளிபரப்பப்பட்டது.
இதில் விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்கு முதலில் கட்டிடத்தின் உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்.
3 நிமிடம் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்ய தோராயமாக 68,000 டாலர் செலவழிக்க வேண்டும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.57 லட்சம்.
வார இறுதி நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை விளம்பரத்தை ஒளிப்பரப்பவதற்கு 95,000 டாலர் அதாவது, ரூ.80 லட்சம்.
வார இறுதி நாட்களில் நள்ளிரவில் விளம்பரத்தை வெளியிட ரூ.2.27 கோடி வரை கட்டணம் அறவிடப்படும்.
இவ்வளவு பெரிய தொகை உங்களுடைய கையில் இருந்தால் போதும் திரைப்படங்கள், அரசு திட்டங்கள் மட்டுமின்றி, உங்கள் பிறந்தநாள், திருமண நாள் குறித்த விளம்பரத்தையும் இதில் காட்சிப்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |