20 நாட்களில் உடல் எடையை குறைக்கும் தேங்காய் மா - எப்படி தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை மெலிவான தோற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதிலும் பதின் வயதில் உள்ள பெண்கள் எப்போதும் உடலை சீராக பராமரித்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்துவார்கள்.
அதற்கு அனைவரும் அதற்கு செய்ய வேண்டியது, நீங்கள் எப்போதும் எடுத்துக்கொள்ளக் கூடிய மா முறைகளை மாற்ற வேண்டும்.
அதாவது சாதாரணமாக கோதுமை மாவு, கடலை மாவு, மைதா, அரிசி மாவு போன்ற மாவுகளை தான் பயன்படுத்துவீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் தோங்காய் மா பயன்படுத்தலாம்.
அது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது உடல் எடையை குறைப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை உங்களுக்கு நன்மையை வழங்கும்.
தேங்காய் மா
தேங்காய் மா என்பது தேங்காயை துருவி, அதில் உள்ள பாலை எடுத்த பின்னர் உலர வைத்து பின்னர் அரைத்து எடுக்கப்படும் மா கலவையாகும்.
இது பேக்கிங் செய்வது முதல் அனைத்து சமையல் செய்முறைக்கும் உதவியாக இருக்கும்.
தேங்காய் மாவில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. நார்ச்சத்து உள்ளது. இதுதவிர புரோட்டீன் 14.3 சதவீதம், கொழுப்பு 54, கார்போஹைட்ரேட் 23.4, டயட் பைபர் 20.5, சாம்பல் 1.5, ஈரப்பதம் 6.7 சதவீதம் உள்ளது.
எனர்ஜி 50 கிலோ கலோரி, புரோட்டீன் 2 கிராம், கொழுப்பு 3 கிராம், கார்போஹைட்ரேட் 8 கிராம், இரும்பு 1.08 மில்லி கிராம், பொட்டாசியம் 200 மில்லி கிராம், சோடியம் 15 மில்லி கிராம் உள்ளது.
இந்நிலையில் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
தேங்காய் மாவில் உள்ள நன்மைகள்
- தேங்காய் மா ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
- புற்றுநோய் அபாயத்தையும் தடுக்கிறது.
- இதய நோய்களுக்கு உதவுகிறது.
- எளிதில் ஜீரணமாகவும் செய்யும்.
- தேங்காய் மாவில் க்ளூட்டன் புரோட்டீன் இல்லை. இது செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான உணவுப் பொருளாகும்.
- உடல் எடையைக் குறைக்கும்.
மேலும் இது அனைவருடைய உடலுக்கும் உகந்த உணவுப் பொருளாகும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் சிலருக்கு வீக்கம் ஏற்படலாம், எனவே கவனத்துடன் எடுத்துக்கொள்ள நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |