சாப்பிடும் உணவை குறைத்த பின்பும் ஏன் எடை குறையவில்லை? - கட்டாயம் அறியவும்
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் உடல் எடை அதிகாரிப்பு ஓர் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. உடல் எடையை குறைக்க அனைவரும் தங்களது சாப்பாட்டை குறைத்துக்கொள்கிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க இரவு உணவையும் அல்லது பலர் காலை உணவையும் தவிர்க்கிறார்கள். இதை செய்வதன் மூலம் பலர் உடல் எடையை குறைக்க முடியும் என நம்புகிறார்கள்.
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்தாது. பெரும்பாலானவர்களால் உணவைத் தவிர்த்தாலும் உடல் எடையைக் குறைக்க முடிவதில்லை.
உடல் எடையை குறைக்க உணவை தவிர்ப்பது சரியா? உணவைத் தவிர்த்த பிறகும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உணவைத் தவிர்த்த பின்பும் ஏன் எடை குறைவதில்லை?
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பசியுடன் இருப்பது அல்லது உணவைத் தவிர்ப்பது சரியானது அல்ல.
ஆரோக்கியமான உணவுகள் ஒருவருடைய உடலுக்கு மிகவும் முக்கியம். நீண்ட நேரம் பசியுடன் இருப்பது உங்களுடைய செரிமானத்தை பாதிக்கும்.
உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைக்காது. எடை இழப்பு ஏற்பட்டாலும், அது நீண்ட காலத்திற்கு அல்ல.
உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் இருப்பது முக்கியம்.
நீங்கள் நீண்ட நேரம் எதையும் சாப்பிடாமல் இருந்தால், உங்கள் வளர்சிதை மாற்றம் குறைகிறது மற்றும் கொழுப்பு எரியும் செயல்முறை குறைகிறது.
அதே நேரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதையாவது சாப்பிடும் போது, நீங்கள் அதிகமாக சாப்பிட நேரிடும். இது எடையைக் குறைக்காது மாறாக அதிகரிக்க செய்யும்.
உணவைத் தவிர்ப்பதன் மூலம் உடல் பலவீனமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமான உணவை உண்ணவும். இரவு உணவை சாப்பிடுங்கள், ஆனால் அதைத் தவிர்க்க வேண்டாம்.
எடை குறைக்க விரும்புவர்கள் புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் ஆரோக்கியமான கலவையை சாப்பிடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |