பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதிகாரப்பூர்வமாகக் கூறினால், அனைத்து பிரெஞ்சுக் குடியுரிமை விண்ணப்பங்களுக்குமான நிர்வாகக் கட்டணம் 55 யூரோக்கள்தான்.
ஆனால், நடைமுறையில், சில மறைமுக கட்டணங்கள் உள்ளன. அவற்றைக் குறித்து அறிந்துகொள்ளலாம்.
பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்?
ஒருவர் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு ஏராளமான ஆவண்ங்களை நிரப்பவேண்டியிருக்கும், நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருக்கும். அத்துடன் சில பரிசோதனைகளும். கூடவே செலவு அதிகம் பிடிக்கும் சில விடயங்களும்...
நீங்கள் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்பது, நீங்கள் எந்த வகையில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் (குடியிருப்பு அனுமதி வாயிலாகவா, திருமணம் வாயிலாகவா), நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர், பிரான்சில் எவ்வளவு காலமாக வாழ்ந்து வருகிறீர்கள் ஆகியவற்றைப் பொருத்தது.
Photo by ALAIN JOCARD / AFP
பொதுவாக என்னென்ன ஆவணங்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்?
பொதுவாகக் கூறினால், பிறப்புச் சான்றிதழ், குற்றப்பின்னணி சோதனை, பிரெஞ்சு மொழிப் புலமையை நிரூபித்தல், வெளிநாட்டு மொழியில் அமைந்துள்ள ஆவணங்களை மொழிபெயர்த்தல், நிர்வாக செலவுகள் (55 யூரோக்கள்), இதுதான் உண்மையில் நீங்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கான செலவு ஆகியவற்றுக்காக நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்கும்.
ஒரு மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், இப்போது குடியுரிமை விண்னப்பங்களை ஒன்லைன் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பிரிண்ட் எடுத்தல் போன்ற விடயங்களுக்கு நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.