ஜனாதிபதியாக இருந்து கொண்டே டிரம்ப் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா? மலைக்க வைக்கும் கணக்கு
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் டொனால்டு டிரம்ப் மொத்தம் 1.6 பில்லியன் டொலர் தொகையை சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிமக்களுக்கான பொறுப்பு மற்றும் நெறிமுறைகள் என்ற அமைப்பானது மேற்கொண்ட தீவிர விசாரணையின் முடிவில் டிரம்ப் தொடர்பான இந்த தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் குழுமம் மற்றும் பிற வழிகளிலிருந்து 2016 மற்றும் 2020 க்கு இடையில் குறைந்தது 1.6 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டியுள்ளார் என அவரே வெளிப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் டொனால்டு டிரம்ப் தமது ஊதியம் மொத்தமும் நன்கொடையாக அளித்திருந்தும், அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சம்பாதித்த வருவாய் இன்னும் அதிக என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், உலக நாடுகள் போன்று அமெரிக்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கி, பல நிறுவனங்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டு வந்த 2020 காலகட்டத்திலும், டிரம்ப் குழுமம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
டிரம்ப் மட்டுமின்றி அவரது மருமகன், ஜாரெட் குஷ்னர் மற்றும் அவரது மகள் இவான்கா டிரம்ப் ஆகிய இருவரும், 2016 முதல் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை 172 மில்லியன் டொலர் முதல் 640 மில்லியன் டொலர் வரை வருமானம் ஈட்டியதாக தெரிய வந்துள்ளது.