மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நடிகர் ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரை பற்றிய தகவல்கள்
நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பாக உடல் முழுவதும் மெட்டல் நிற பெயின்டை பூசிக்கொண்டு ரோபோ போல டான்ஸ் ஆடியதால் இவருக்கு ரோபோ என்ற புனைபெயர் கிடைத்தது.
பின்னர் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். இதையடுத்து, தனுஷ் நடித்த மாரி படத்தில் நடித்தது ரோபோ சங்கருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டார் ரோபோ சங்கர். தற்போது, இவர் மறைந்த நிலையில் அவரை பற்றிய தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.
சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வைத்துள்ள ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு 5 முதல் 6 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, ரியல் எஸ்டேட்டிலும் ரோபோ சங்கர் முதலீடு செய்துள்ளாராம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |