ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரஷ்யாவின் தூர கிழக்கு கடற்கரையான கம்சட்கா தீபகற்பத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
நிலநடுக்கம்
பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 127–128 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது சுமார் 10–20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் சுரே (UGCS) தெரிவித்துள்ளது.
கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் 0.5 முதல் 1.5 மீட்டர் உயர அலைகள் எழும்பும் என அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் தேசிய வானிலை சேவை ஆகியவை அலாஸ்காவின் சில பகுதிகளுக்கு 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும் என்று எச்சரித்துள்ளன.
ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் அமைந்துள்ள குரில் தீவுகளும் மாஸ்கோவின் அவசரகால அமைச்சகத்தால் சுனாமி கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய், பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது கனடாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.
கடந்த வாரத்தில் ரஷ்யாவின் தொலைதூர கம்சட்கா பகுதியில் மட்டும் 7க்கும் அதிகமான அளவு கொண்ட குறைந்தது இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
முன்னதாக, ஜூலை மாதம் இப்பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட பல கடலோர மாநிலங்களுக்கு சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |