தற்போது தாஜ்மஹாலை கட்டினால் எவ்வளவு செலவாகும் தெரியுமா?
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தற்போது கட்டினால் எவ்வளவு செலவாகும் என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.
எவ்வளவு செலவாகும்?
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அன்பு மற்றும் பக்தியின் பிரகாசமாக உள்ளது. இதனை பார்ப்பதற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இது வெள்ளை பளிங்கு கல்லறை மட்டுமல்லாமல் அன்பின் அடையாளமாகவும் உள்ளது. முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக இதனை கட்டினார்.
கடந்த 1632-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானம் சுமார் 22 முதல் 25 ஆண்டுகள் வரை நீடித்தது. இது, முகலாய மற்றும் இந்திய பாணிகளுடன் கலந்த இந்தோ-இஸ்லாமிய கட்டடக்கலையின் சிறப்பை காட்டுகிறது.
இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த லேபிஸ் லாசுலி, கார்னிலியன், ஓனிக்ஸ், தங்கம் மற்றும் வெள்ளை பளிங்கு கற்களின் பயன்பாடாக உள்ளது.
இந்நிலையில் இதனை கட்டுவதற்கு சுமார் ரூ.32 மில்லியன் (அதாவது ரூ.3.2 கோடி) செலவாகியிருக்கலாம் என்று சில வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
மேலும், இதற்கு ரூ.42 மில்லியன் செலவாகியிருக்கலாம் என்று ஸ்டடீஸ் இன் முகலாய இந்தியா (Studies in Mughal India) என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் கூறியுள்ளார்.
இதனை வைத்து தற்போது தாஜ்மஹாலை கட்டினால் எவ்வளவு செலவாகும் என்று பார்த்தால் ரூ.7,000 கோடிக்கு மேல் அல்லது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |